தமிழகத்தில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் (ஏப்ரல் 1, 2026) நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் இந்தக் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்விற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நான்குநேரி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் இதில் அடங்கும். வாகனங்களின் வகையைப் பொறுத்து ரூ. 5 முதல் ரூ. 100 வரை இந்தக் கட்டண உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்படும் முக்கிய வழித்தடங்கள்
சென்னை-கன்னியாகுமரி, திருச்சி-சேலம் மற்றும் சேலம்-கோயம்புத்தூர் உள்ளிட்ட பிரதான நெடுஞ்சாலைகளில் உள்ள 60 சுங்கச்சாவடிகள், வண்டலூர்-மிஞ்சூர் வெளிவட்டச் சாலையில் உள்ள 4 சாவடிகள் மற்றும் நாவலூர் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 8 சுங்கச்சாவடிகளில் இந்த மாற்றம் அமலாகிறது. மற்ற 17 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி கட்டணம் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு அபாயம்
சுமார் 3 முதல் 5 சதவீத கட்டண உயர்வு காரணமாக, கார்களுக்கு ரூ. 5 வரையிலும், கனரக வாகனங்களுக்கு ரூ. 40 வரையிலும் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்துச் செலவு அதிகரித்து, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கட்டணத்தைத் தவிர்க்க வாகனங்கள் கிராமப்புறச் சாலைகளைப் பயன்படுத்துவதால் அங்குப் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை சேதம் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நிவாரணம் கோரும் உரிமையாளர்கள்
தனியார் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், இந்தத் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. தினசரி இயக்கச் செலவில் சுங்கக் கட்டணம் பெரும் சுமையாக மாறி வருவதால், போக்குவரத்துத் துறைக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LIVE 24 X 7