தமிழ்நாடு

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் நிம்மதி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் நிம்மதி!
Gold Rate
சென்னையில் நேற்று ஒரே நாளில் மூவாயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்து அதிர்ச்சியளித்த தங்கம் விலை, இன்று (ஏப்ரல் 2) சற்றே குறைந்து நகைப்பிரியர்களுக்குச் சிறிய ஆறுதலைத் தந்துயுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 800 குறைந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை சரிவு

ஏப்ரல் முதல் நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 380-ம், சவரனுக்கு ரூ. 3,040-ம் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 100 குறைந்து ரூ. 13,950-க்கும், சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,09,360-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை குறைவு

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வெள்ளி கிலோவுக்கு ரூ. 15,000 உயர்ந்திருந்த நிலையில், இன்று ரூ. 10,000 குறைந்துள்ளது.