தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கான தண்டனை விவரம் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் உயிரிழந்த வழக்கைச் சிபிஐ விசாரித்தது. இந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் குற்றவாளிகள் என கடந்த மாதம் 23-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிபிஐ-யின் அதிரடி வாதம்
இன்று மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் மிகக்கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. "ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்கி, இருவரையும் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளதால், குற்றவாளிகள் 9 பேருக்கும் சட்டப்படியான உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும்" எனச் சிபிஐ வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.
நேரடி சாட்சிகள் மற்றும் ஒத்திவைப்பு
பொதுவாகக் காவல் நிலைய மரணங்களில் நேரடி சாட்சிகள் கிடைப்பது அரிது என்றும், ஆனால் இந்த வழக்கில் மூன்று பேர் நேரடி சாட்சிகளாக உள்ளது குற்றத்தை உறுதிப்படுத்துவதாகவும் சிபிஐ தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் விரிவான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் இறுதித் தண்டனை விவரங்களைத் தலைமை நீதிபதி முத்துக்குமரன் வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) அறிவிக்க உள்ளார்.

LIVE 24 X 7