தமிழ்நாடு

TN Weather: தமிழகத்தில் ஏப்.13 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் ஏப்.13 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!
TN Weather
தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், மேற்கு வங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், தெலங்காணா, ராயலசீமா தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன்காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒரிரு
இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடக்கு உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை (ஏப்.09) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும், ஏப்.10-ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.