K U M U D A M   N E W S

சென்னையில் மேலும் 10 இடங்களில் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்கள் வரவு - மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் விரிவாக்கம்!

பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், சென்னை மெட்ரோ வாட்டர், மேலும் 10 புதிய இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

முழு வீச்சில் கோவை மெட்ரோ, ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள்.. கூடுதல் ரயில்களை இயக்க முயற்சி!

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம்-அவிநாசி சாலை திட்டம்: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் 17 பேர் கைது!

மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழி சாலை விரிவாக்க திட்டத்திற்காக மரத்தை வெட்டுவதற்காக வந்த ஜே.சி.பி இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். நில அளவை செய்யாமல் மரத்தை வெட்டக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.