கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் வழியாக அவிநாசி வரை 36 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூபாய் 250 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கியுள்ளது.
இதற்காக இவ்வழித்தடத்தில் உள்ள 1400 க்கும் மேற்பட்ட மரங்கள் தற்போது பூமியில் இருந்து வேரோடு சாய்க்கப்பட்டு பின்னர் அவற்றை வெட்டி லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.
சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் அவிநாசி சுற்றுவட்டார பகுதி மக்கள் அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு செல்கின்றனர். போக்குவரத்து முக்கியத்தும் இச்சாலையில் தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இப்பணிக்காக மேட்டுப்பாளையம் முதல் அவிநாசி வரையிலான 1,432 சாலையோர மரங்கள் வெட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகின்றன.
நவீன அறுவை இயந்திரங்கள், பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் இதுவரை இவ்வழியே பயணிப்போருக்கு நிழல் தந்து உதவிய ஐம்பதாண்டுகளுக்கும் மேல் பழமையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வரிசையாக வெட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை நடுர் காபி ஹவுஸ் அருகே சாலையோரத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்துரத்துடன் வந்தனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வருவாய்த் துறையினர் தங்களது நில அளவை செய்யவில்லை சாலை விரிவாக்க பணிக்காக எங்கள் இடம் எவ்வளவு எடுக்கப்படும் என தெரிவிக்கவில்லை இந்த நடைமுறையை முடித்த பின்னரே மரத்தை வெட்ட வேண்டும் என்று அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்தனர்.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமனன் மற்றும் போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால் 15 பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.