மானாமதுரையில் அரிவாள் வெட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் டெல்சன் என்ற வாலிபர், போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்திற்குப் போலீசாரின் தாக்குதலே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆகாஷ் அளித்த மரண வாக்குமூலத்தின் நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கண் கட்டப்பட்டுத் தாக்குதல்
ஆகாஷ் அளித்த வாக்குமூலத்தில், காவல்துறையினர் தன்னைத் தாக்கிய விதம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். "சீருடையில் இல்லாத 10 போலீசார் எனது கண்ணை வெள்ளை துணியால் கட்டித் தனியாக அழைத்துச் சென்றனர். அங்கு எனது கால்களுக்குக் கீழே கற்களை வைத்து, ஈரச் சாக்கைப் போர்த்தி இரும்பு கம்பியால் ஓங்கி அடித்தனர். அந்தத் தாக்குதலில் எனது வலது காலில் எலும்பு முறிந்து ரத்தம் கொட்டியது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் மிரட்டல்
கண் கட்டப்பட்டிருந்ததால் தன்னைத் தாக்கியது யார் என்று அடையாளம் தெரியவில்லை என்று கூறியுள்ள ஆகாஷ், காயமடைந்த பிறகு போலீசார் தன்னை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். "மருத்துவரிடம் பேசும்போது, பாலத்தில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகச் சொல்ல வேண்டும் என்று போலீசார் என்னை மிரட்டினர்" என்றும் அந்த வாக்குமூலத்தில் பதிவாகியுள்ளது.
நீதிமன்ற விசாரணை
இந்த வாக்குமூலத்தின் நகல் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தற்போது மிக முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சம்பவத்தில் SC/ST பிரிவின் கீழ் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LIVE 24 X 7