சென்னையில் பரத நாட்டிய வகுப்புக்கு வந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பரத நாட்டிய பயிற்சி மையத்தில் நடனம் கற்று வருகிறார். வழக்கம் போல் நேற்று சிறுமி வகுப்புக்குச் சென்றிருந்தபோது, அந்தப் பயிற்சி மையத்தை நடத்தி வரும் நடன ஆசிரியையின் கணவரான உமாசங்கர் (60) என்பவர், சிறுமியைத் தனியாக அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்த சிறுமி, உடனடியாக இது குறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
போலீஸ் நடவடிக்கை
சிறுமி அளித்த தகவலின் பேரில், அவரது பெற்றோர் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட மகளிர் போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தி நடந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து, ஓய்வுபெற்ற அரசு ஊழியரான உமாசங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட உமாசங்கரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். பயிற்சி மையங்களில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7