தமிழ்நாடு

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்துள்ளது.

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!
Gold Rate
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,240 சரிந்து, ஒரு சவரன் ரூ.1,05,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை சமீபத்தில் சரிவைக் கண்டிருந்தாலும், கடந்த வாரம் முழுவதும் உயர்வையே பதிவிட்டு வந்தது. இடையில் 23 ஆம் தேதி அன்று சவரனுக்கு ரூ.2,160 குறைந்தபோதிலும், அதன் பின்னர் தொடர்ந்து ஏற்றம் கண்டது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,06,960-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடிச் சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் கிராமுக்கு ரூ.155 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,720-ஐ எட்டியுள்ளது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.