தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் மதிய சத்துணவுத் திட்டத்தில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்துத் பரிசீலிக்கப்பட்டு வருவதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதிசெய்யும் வகையில் மதியச் சத்துணவுத் திட்டமும், அதனுடன் முட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் ராஜ்மோகன் கலந்துரையாடினார்.
அக்கூட்டத்தின் போது, பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவோடு வாரம் ஒருமுறை மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிகளில் சத்துணவோடு மாணவர்களுக்கு முட்டை வழங்குவது போல் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்கத் தாம் விரும்புவதாகவும், இதுகுறித்துத் துறை ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுத் தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக ஆய்வு நடத்தி விரைவில் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும். முதலமைச்சர் அனுமதி அளித்தபின் இத்திட்டத்தின் பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது.

LIVE 24 X 7