தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) இன்று முதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
நடந்து முடிந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து, அத்தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளின் EVM-களை மறுஆய்வு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் வேட்பாளர்கள் எழுப்பும் புகார்களின்பேரில் குறிப்பிட்ட இயந்திரங்களை ஆய்வு செய்வது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையாகும். அதன்படி, சிந்தாதிரிப்பேட்டையில் 'சீல்' வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்த இயந்திரங்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்த ஆய்வின் போது திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ, சட்டத்துறை துணைச் செயலாளர் சந்துரு ஆகியோரும், த.வெ.க. சார்பில் வழக்கறிஞர் அருண் மற்றும் வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் பிரதிநிதிகளும் நேரில் பங்கேற்றுள்ளனர்.
இப்பணிகள் இன்று முதல் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளன. தினமும் இரண்டு வாக்குச்சாவடிகளின் EVM-கள் வீதம் பரிசோதிக்கப்படும். இதேபோன்று புகார்கள் பெறப்பட்டுள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய தொகுதிகளிலும் EVM சரிபார்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

LIVE 24 X 7