K U M U D A M   N E W S

tvk

மனு கொடுக்க வந்தவருக்கு அடி, உதை..ரவிசங்கர் விவகாரத்தில் முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?

குடிநீர் பிரச்னை குறித்து புகார் அளிக்கச் சென்ற துறையூர் பகுதி கார்த்திக்குமாரை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக எழுந்த புகார் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் விஜய் சட்டப்படி நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அம்பேத்கர் வெளிநாட்டு உதவித்தொகை...விஜய் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்டாலின்!

அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் தவித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு விவகாரம்: ACTION எல்லாம் சினிமாவில் மட்டும்தானா முதல்வரே? இபிஎஸ் விமர்சனம்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய்யை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சர்ச்சையில் தவெக எம்எல்ஏக்கள்…கொந்தளித்த எதிர்க்கட்சிகள்…விஜய்க்கு ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தவெக எம்எல்ஏக்கள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முதலமைச்சர் விஜயை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்.. தவெக MLA மீது டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார்!

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் : பெரும் பரபரப்புக்கு நடுவே பெண் எம்.எல்.ஏக்கள் வெளியேறியது ஏன் ?

மாமல்லபுரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பெண் எம்எல்ஏக்கள் மட்டும் வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள்...ஆக்‌ஷன் எடுப்பாரா விஜய்? திடீரென ஒத்திவைக்கப்பட்ட கூட்டம்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்த தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

"அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை.." வைகோ விமர்சனத்திற்கு பெ.சண்முகம் பதிலடி!

கூட்டணியில் இருந்தாலும் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது அவசியமானது என வைகோவின் விமர்சனத்திற்கு பெ.சண்முகம் பதிலளித்துள்ளார்.

சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! - CM விஜய்க்கு ஸ்டாலின் அதிரடி!

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை, குற்றச் சம்பவங்கள் மற்றும் தவெக மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளப் பதிவில் முன்வைத்துள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

"ஆட்சியருகே ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி MLA-வை கைது பண்ணுங்க.." இபிஎஸ் வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்குத் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் தவெக எம்.எல்.ஏவைக் கைது செய்து நேர்மையான விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.