தமிழ்நாடு

மீண்டும் மீண்டுமா.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

மீண்டும் மீண்டுமா.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!
Gold Rate
நேற்றைய தினம் இருமுறை தங்கம், வெள்ளி விலை குறைந்த நிலையில், இன்று விலை சற்றே உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது.

சென்னையில் நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14.050-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ தங்கம் ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, நேற்று மாலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 குறைந்தது. அதேபோல், வெள்ளி விலையில் மாற்றமின்றி அதை விலையில் விற்பனை செய்யப்பட்ட்து.

இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.