மே மாதத்தின் தொடக்கத்திலேயே வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது, இது பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளன. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் விலை மாற்றியமைக்கப்படும் நிலையில், மே மாதத்திற்கான அறிவிப்பில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை இன்று ஒரே நாளில் ரூ. 993 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒரு வணிக சிலிண்டரின் விலை ரூ. 3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சங்கிலித் தொடராக உயரும் கட்டணங்கள்
இந்த அதிரடி விலை உயர்வு 19 கிலோ சிலிண்டருடன் நிற்காமல், 5 கிலோ எடையுள்ள சிறிய வகை சிலிண்டர் விலையிலும் எதிரொலித்துள்ளது. அதன் விலை இன்று ஒரே நாளில் ரூ. 261 உயர்ந்துள்ளது. ஏற்கனவே எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்களில் உணவுகளின் விலை தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய விலை உயர்வு ஹோட்டல் மற்றும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்வுக்கான பின்னணி
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் சர்வதேச அந்நியச் செலாவணி மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையைக் கணக்கில்கொண்டு இந்த மாற்றத்தைச் செய்துள்ளன. சமையல் எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலையில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

LIVE 24 X 7