சென்னையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைக் கண்டுவரும் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது. அதன்படி, தங்கம் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் நிலவி வருகின்றன. கடந்த ஜூலை 27-ஆம் தேதி சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 28-ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,240 சரிந்து ரூ.1,05,720-க்கும், நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து இரண்டு நாட்கள் சரிவைக் கண்ட தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேவேளையில், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7