தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விலை உயர்வால் தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் ரூ.1,000 கட்டணம் உயர்வு வரும் மே 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக விடுதி உரிமையாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கடந்த 2026 பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து எரிவாயு விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலிண்டர் 6000, 7000 கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மர அடுப்புகளை பயன்படுத்தி எங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறோம். மரக்கட்டைகளின் விலையும் விண்ணளவு உயர்ந்துள்ளது. மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது எனவே தங்கும் விடுதிகளின் கட்டணம் மே ஐந்தாம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி,
* 4 பேர் தங்கும் வகையிலான Non AC அறையின் கட்டணம் ரூ.6500 - AC அறையின் கட்டணம் 7,500.
* 3 பேர் தங்கும் வகையிலான Non AC அறையின் கட்டணம் ரூ.7000 - AC அறையின் கட்டணம் 8,000.
* 2 பேர் தங்கும் வகையிலான Non AC அறையின் கட்டணம் ரூ.8000 - AC அறையின் கட்டணம் 9,000.
குறைந்தபட்ச தொகையாக நிர்ணயத்திருக்கிறோம். ஒரு சில விடுதிகளில் அவர்கள் கொடுக்கும் வசதிகளை பொறுத்து இந்த விலை மாறுபடும் அனைவரும் எங்களுக்கு ஆதரவளித்து உங்களுக்கு சேவை செய்ய வழி செய்யுமாறு வேண்டுகிறோம்" என்று டெஹ்ரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் விலை உயர்வு விடுதிகளில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கூடுதல் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7