Breaking news

ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு வீடு திரும்பி விடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், போடி நாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் பல்வேறு சட்டப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அவர் தனது வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் கடந்த ஜூன் மாதம் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்ற ஓ.பன்னீர்செல்வம் அங்கு ஒரு வாரம் காலம் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.