K U M U D A M   N E W S

பாஜக

திமுக ஆட்சியில் பின்தங்கியிருக்கும் தமிழகம்.. அண்ணாமலை விமர்சனம்

கிராமத்தில் உள்ள மாணவ, மாணவியர், கல்வி கற்பதற்காக, பரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்பது, விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை பின்தங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளர் விஜய்... தவெக செயற்குழுக் கூட்டத்தில் 20 தீர்மானகள் நிறைவேற்றம்

2026 தேர்தலில் தவெகவின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும் கூட்டணி குறித்து விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தவெக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இபிஎஸ் சுற்றுப்பயணம்…நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு

எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தில் பங்கேற்க நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவை கபளிகரம் செய்ய பாஜக துடிக்கிறது- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

தமிழகத்தில் பாஜக நோட்டாவுக்கு கீழாக தான் உள்ளது என அமைச்சர் சிவசங்கர் பேச்சு

திராவிடத்துக்கு எதிராக பேசும் பாஜக.. மௌனம் காக்கும் அதிமுக- அமைச்சர் சிவசங்கர்

அதிமுக, பாஜகவுக்கான மேடையை அமைத்துக் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சியா? அண்ணாமலை கேள்வி

காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நிகழாமலிருக்க தக்க ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாக போய்விட்டது- தமிழிசை செளந்தரராஜன்

திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என தமிழிசை செளந்தராஜன் குற்றச்சாட்டு

திருப்புவனம் விவகாரம்: முதல்வருக்கு நயினார் 9 கேள்விகள்..!

சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

மும்மொழிக்கொள்கையை ரத்து செய்த பாஜக அரசு...எந்த மாநிலத்தில் தெரியுமா?

மாநிலம் முழுவதும் மொழிக்கொள்கை அமல்படுத்தும் விதத்தை ஆய்வு செய்ய புதிய வல்லுநர் குழுவை அமைக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.

திமுகவை தோற்கடிக்கப் புறப்படும் தமிழ்நாடு.. தமிழிசை சௌந்தரராஜன்

தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் பேரணியாக திரளப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு வழங்கும் உணவில் அலட்சியம் ஏன்?.. நயினார் நாகேந்திரன் கேள்வி

“தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பை பறிப்பதுதான் அவர்களின் திட்டம்.. ராகுல் காந்தி

ஏழைகளின் உரிமைகளை பறித்து மீண்டும் அவர்களை அடிமைப்படுத்துவதே ஆர்எஸ்.எஸ். - பாஜகவுக்கு நோக்கம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா திமுக டூ அடமான திமுக.. கி.வீரமணி விமர்சனம்

“அண்ணா திமுக போய், அமித்ஷா திமுகவாக மாறி, தற்போது அடமான திமுகவாக உள்ளது” என கி.வீரமணி அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும்.. பெ.சண்முகம் அறிவுறுத்தல்

அதிமுக தன்னை காப்பாற்றிக்கொள்ள பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பெ. சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

மாணவிகளை அலைக்கழிப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி

"மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை.. அமைச்சர் கே.என்.நேரு

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை எனவும் கூட்டணிக்குள் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

அதிமுகவினரின் செயல் ஏற்புடையது அல்ல.. ஜவாஹிருல்லா கண்டனம்

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா, பெரியார் குறித்து ஒளிபரப்பப்பட்ட வீடியோவுக்கு அதிமுகவினர் தாமதமாக கண்டனம் தெரிவித்தது ஏற்புடையதல்ல என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கு.. வானதி ஸ்ரீனிவாசன்

அதிமுக - பாஜக கூட்டணி மிக உறுதியாக இருப்பதாகவும் இதை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை.. நயினார் நாகேந்திரன்

“மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நிதி வேண்டாம்… சாமி வேண்டும்.! வழிக்கு வந்த அண்ணாமலை..? குஷியில் அதிமுக மாஜிக்கள்..!

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தாலும், என் வழி தனி வழி என பயணித்துக் கொண்டிருந்த அண்ணாமலை தற்போது எடப்பாடி பழனிசாமியின் வழிக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை ஆற்றிய உரை பாஜக-வினரை மட்டுமல்லாது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களையும் குஷிப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான்- அமைச்சர் கோவி.செழியன்

எடப்பாடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் என புதியதாக எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான் என அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

முருக பக்தர்கள் மாநாடு விவகாரம்.. அதிமுகவினர் உடலில் ஓடுவது ரத்தமா? பாஜக பாசமா? - ஆர்.எஸ்.பாரதி சாடல்

அண்ணாவின் பெயரைத் தாங்கிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், அண்ணாவுக்கும், பெரியாருக்கும் பெரும் அவமானத்தை தேடித் தந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகச் சாடியுள்ளார்.

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா புகைப்படங்கள் குறித்த சர்ச்சை.. நயினார் நாகேந்திரன் விளக்கம்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று அண்ணா, பெரியார் படங்களுடன் வீடியோ வெளியானது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை, அதனை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பட்டியலின மக்கள் மீதான வன்முறை: திமுக ஆட்சியில் உச்சம்- நயினார் நாகேந்திரன்

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் கொடூர உச்சத்தை அடைந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.