பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்டம், ஓமலூரில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றார்.
காவல்துறைக்கு அறிவுறுத்தல் இல்லை
இந்த மாரத்தான் போட்டியில் ஓமலூர் மற்றும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 8 வயது முதல் பெரியோர்கள் வரை 5 கிலோமீட்டர், 4 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பெரியவர்கள் ஆண்கள் பிரிவில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு ஓமலூர் அலங்கார் தியேட்டர் அருகிலிருந்து பல்பாக்கி, காமாண்டபட்டி, வேளாச்சாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி வழியாக போட்டி தொடங்கிய பின்னர் தொடங்கிய இடத்திற்கே வந்தடைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாத சூழ்நிலையில் உள்ளது. கடந்த 5 நாட்களில் 17 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுஇடங்களில் சாக்லேட் வடிவில் போதைப் பொருட்கள் விற்பனை செய்து செய்கிறார்கள் என கூறுகின்றனர்.
இதையெல்லாம் அரசு, முதலமைச்சர், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற போதைப்பொருள் விற்பனையை தடுக்க முடியும். ஐந்து தினங்களில் 17 பாலில் வன்கொடுமை அதே போல் 24 லாக்கப் மரணம் நடந்துள்ளது. ஆனால் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் காவல்துறைக்கு எந்த அறிவுறுத்தலும் கொடுக்கப்படவில்லை.
ஆட்சி மாற்றம் கொண்டுவர வேண்டும்
ஆரம்ப காலத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் என ஆரம்பித்தார்கள். தற்பொழுது உங்களோடு முதலமைச்சர், உங்களோடு மதிப்பிற்குரிய ஸ்டாலின் என ஆரம்பித்துள்ளார்கள். இது மாதிரியான பணிகளுக்கு மட்டுமே அதிகாரிகள் பணியாற்றிய வருகின்றனர். மக்கள் பணிக்கு அதிகாரிகள் பணியாற்றுவது கிடையாது.
தமிழ்நாடு சட்டமன்ற அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது தலைமை செயலாளர் வேலைக்கு வர வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கின்றார். கடந்த 30 ஆண்டு கால வரலாற்றில் வேலைக்கு வர வேண்டும் என நோட்டீஸ் கொடுப்பது இதுதான் முதல் முறை. அதனால் தான் ஆட்சி மாற்றம் கொண்டுவர வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்து செய்தியாளர் கேள்விக்கு, கடைசிவரையில் தான் நினைத்ததை செய்து காட்டியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அதேபோல் ஜெயலலிதாவும் செய்து காட்டினார்” தெரிவித்தார்.