விபத்தில்லா புத்தாண்டு - காவல்துறை அறிவிப்பு | Happy New Year 2026 | Kumudam News
விபத்தில்லா புத்தாண்டு - காவல்துறை அறிவிப்பு | Happy New Year 2026 | Kumudam News
விபத்தில்லா புத்தாண்டு - காவல்துறை அறிவிப்பு | Happy New Year 2026 | Kumudam News
கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.
கோவை போத்தனூர் அருகே திருடிய சேவலை டீ-சர்ட்டுக்குள் மறைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்
கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் வாடகை வீட்டு விவகாரத்தில், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரியின் வீட்டில் புகுந்து தாக்கிய ரவுடி, வழக்கறிஞர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், பொறுப்பு அதிகாரி யார் என விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சிக்கு சூளைமேடு போலீசார் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னை கொளத்தூரில் நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன், மற்றொரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடபழனியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 68 வயதான முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9.7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறைக்கு முறையாக அறிவுறுத்தல் இல்லை என நயினார் நாகேந்திரன் கருத்து
சென்னையில் தொழிலதிபர் ஒருவரை 'ஹனி டிராப்' (honey trap) செய்து கடத்தி பணம் பறித்த வழக்கில், ஒரு பெண் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக காவல்துறையின் 35 ஆண்டுக்கால சேவையைப் பூர்த்தி செய்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ், இன்று தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பொதுவாக, இந்த உயரிய பொறுப்பிலிருந்து ஓய்வு பெறும் அதிகாரிகளுக்குக் காவல் துறை சார்பில் வழங்கப்படும் பாரம்பரியமான "ரோப் புல்லிங்" மரியாதையை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் வாகனங்களுக்கான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம்குறித்த முக்கிய வழிமுறைகளை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் என விஜய் தெரிவித்துள்ளார்.
திருந்தி வாழ்ந்து வருவதாகவும், காவல்துறை பொய் வழக்கு போடுவதாகவும் வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தன்னுடை பழைய மொபைல் எண்ணால் இளைஞர் ஒருவரிடம் சிக்கிய நிலையில், அந்த எண்ணிற்கு விராட் ஏபிடி போன்ற பிரபலங்கள் ஆகியோர் அழைப்பு விடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நானும் ரவுடியென மிரட்டி மாமூல் கேட்டுத் தொல்லை கொடுத்த இளைஞரை, இளம்பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் வீசித் தற்கொலை என்று நாடகமாடி, பிணத்துடன் செல்ஃபி எடுத்த விவகாரத்தில் காவல்துறையினர் 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.