உணவில் அதிக உப்பு.. கணவன் தாக்கியதில் கர்ப்பிணி மனைவி தவறி விழுந்து உயிரிழப்பு!
உணவில்அதிக உப்பு சேர்த்ததாக மனைவியை கடுமையாக தாக்கிய கணவரால் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவில்அதிக உப்பு சேர்த்ததாக மனைவியை கடுமையாக தாக்கிய கணவரால் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனை அளிப்பதாகவும்,. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
“திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
பழவேற்காடு அருகே நடைபெற்ற ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையின் போது, கடல் வழியாக அதானி துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 9 பேரும், சாலை வழியாக முயன்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலை 7:30 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் லாரிகள் இயங்க தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் கொடூர உச்சத்தை அடைந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது காதலன் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக மிரட்டி, பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை மும்பை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியலூரில் டால்மியா சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டு கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்கு சாதகமாக காவல்துறையினர் பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
அரசு பேருந்து ஓட்டுநரை செருப்பால் தாக்கிய விவகாரத்தில் உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நான்கு பேர் மீது ஐந்து பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
18 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் பதவி உயர்வு வழங்கியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், மேற்கு மாவட்டங்களில் முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவது காவல்துறையின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரபல தனியார் வங்கி பெயரில் நாடு முழுவதும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல், தென்னிந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சீருடையுடன் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டாம் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில், வீட்டில் புகுந்து ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடியிசத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு வழக்குகளில் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட 150 ரவுடிகளுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் வரை நீதிமன்றம் மூலம் சிறை தண்டனை பெற்று தந்ததாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்தால் வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கிய தவெக பெண் நிர்வாகியை ஷூவால் எட்டி உதைத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதுபோல எதுவும் நடக்கவில்லை என போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மதுபோதையில் டீக்கடையில் புகுந்து மூன்று பேரை அடித்து ரகளையில் ஈடுபட்ட 5 சிறார்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை கிரண் போலி ஆபாச வீடியோ வெளியானது குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மதுரையில் மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியின்போது மின்சார வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ. 50 லட்சம் சொத்து, 46 லட்சம் வங்கி கணக்குகளை முடக்கி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.