பெருநகர சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் ( மண்டலம் 5 மற்றும் 6) தூய்மைப்பணிகள் தனியார் நிறுவனம்மூலம் கடந்த ஜூலை 16ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
இந்த நிலையில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கடந்த 1ம் தேதி முதல் ரிப்பன் மாளிகை கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் சூழல் மற்றும் குறைந்த ஊதியம் போன்றவற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ஆகையால் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்டவை வழங்கக்கோரி தூய்மைப் பணியாளர்கள் 13 நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குப் பாமக, விசிக, தவெக, பாஜக, சிபிஎம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களைத் தவெக தலைவர் விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளதாக உறுதி அளித்தார்.
பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்
இதனிடையே அனுமதிக்கப்படாத இடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. போராட்டம் நடத்தும் இடத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கு நேற்று மாலை முதலே போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் எனத் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மருத்துவ உதவி
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்.
குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்தபோது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும்போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள்மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் நடப்பது கொடுங்கோலாட்சி
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை? அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்? அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.