K U M U D A M   N E W S

தவெக

அஜித்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கும் விஜய்.. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி தவெக மனு!

எழும்பூர், காவல் ஆணையர் அலுவலகம், ஆர்பாட்டம், சிவகங்கை, அஜித்குமார்,த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம்

காவலாளி அஜித் குமார் மரணம்: தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

சிவகங்கை அருகே கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமாருக்கு நீதி வேண்டும்..சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க விஜய் வலியுறுத்தல்

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

திருப்புவனத்தில் இளைஞர் மரணம்: வழக்குப்பதிந்து கைது செய்க- தவெக வலியுறுத்தல்

காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணத்தில் தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.

ஜெயலலிதா பாணியில் விஜய்…தவெகவினருக்கு ஆனந்த் போட்ட உத்தரவு

2026ல் சட்டமன்றம் எங்கள் கையில் இருக்கும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய் தலைமையில் தவெக மாநிலச் செயற்குழு கூட்டம்.. வெளியான அறிவிப்பு

தவெகவின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், ஜூலை 4 ஆம் தேதிபனையூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேனர் விழுந்து முதியவர் காயம் – தவெகவினருக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு

சென்னை வில்லிவாக்கத்தில் தவெக பேனர் சரிந்து முதியவர் காயமடைந்தார்.இந்த வழக்கில் தவெகவினர் 3 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 70 வயது முதியவர் மோகனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“என் நெஞ்சில் குடியிருக்கும்”... சாதனை படைத்த ஜனநாயகன் திரைப்படத்தின் FIRST ROAR!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

விஜய்யை சந்திக்க த்ரிஷா போல இருக்க வேண்டும்.. நல்லசாமி ஆதங்கம்

தவெக தலைவர் விஜய் யானையில் அமர்ந்திருப்பதாகவும், அவரை சந்திக்க நான் த்ரிஷா, நயன்தாரா போன்று இருக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழர் நாகரிகம் எரிமலை போன்றது.. தவெக எச்சரிக்கை

தமிழ், தமிழர் நாகரிகம் என்பது எரிமலை போன்றது என்றும் கீழடி விவகாரத்தில் வீணாக கை வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தவெக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு கண்துடைப்பாக இருக்கக்கூடாது.. விஜய் வலியுறுத்தல்

"மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

2026ல் தவெக-வின் தாக்கத்தை மக்கள் முடிவு செய்வார்கள்- டிடிவி தினகரன்

அமமுக இன்னும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறது என டிடிவி தினகரன் பேட்டி

விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Direct-ஆ முதல்வர் தானா? - விஜய்யை விமர்சனம் செய்த சைதை சாதிக்

வார்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை, Direct-ஆ முதல்வர் தானா? என தவெக தலைவர் விஜய்யை திமுக பேச்சாளர் சைதை சாதிக் விமர்சனம் செய்துள்ளார்.

தவெகவில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தவெகவில் இணைந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

பணமாலை அணிவித்து அமைச்சருக்கு வரவேற்பு...தவெக மா.செ. செயலால் தி.மலையில் பரபரப்பு

த.வெ.க மாவட்ட செயலாளரின் புதுமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலுக்கு பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சினிமா கவர்ச்சியால் மட்டும் விஜய்யால் வெற்றி பெற முடியாது – துரை வைகோ

2026 தேர்தல் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்பதே மதிமுகவின் நிலைப்பாடு என துரை வைகோ தெரிவித்தார்.

தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிருப்தி நிர்வாகிகளில் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவது அறிவாலய வட்டாரத்தில் ஆனந்தத்தை பொங்கச் செய்திருப்பதாக கூறப்படுகிறது இதனால் அந்த அதிருப்தி நிர்வாகிகளில் பட்டியல திமுக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது

இபிஎஸ் குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா

ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.

பெண்கள் ஆதரவை குறைக்கவே விஜய் திமுக அரசை விமர்சிக்கிறார் - அமைச்சர் ரகுபதி

திமுகவிற்கு பெண்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை குறைக்கவே திமுக அரசை பா.ஜ.க C- டீமான விஜய் குறை கூறுகிறார் என்று திருச்சியில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தீர்ப்பு நீதியாக இருக்க வேண்டும் – சீமான்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் ஆடு, மாடுகள் மாநாடு வைத்திருக்கிறேன் அதில் கலந்து கொள்வேன் சீமான் பேட்டி

“பச்சைப் பொய் சொல்கிறார் மு.க.ஸ்டாலின்” – விஜய் கடும் விமர்சனம்

அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தவெக வரவேற்கிறது என விஜய் எக்ஸ் தளப்பதிவு

தீ விபத்து சம்பவம்.. தவெகவினரை போலீசார் தாக்கவில்லை என விளக்கம்!

தீ விபத்தால் வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கிய தவெக பெண் நிர்வாகியை ஷூவால் எட்டி உதைத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதுபோல எதுவும் நடக்கவில்லை என போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தவெக பெண் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல்.. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் கல்வி விருது விழா..!

10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தவெக சார்பில் வரும் 30ம் தேதி கல்வி விருது விழா நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.