மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்க வேண்டாமெனச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என்றும், இடைத்தரகர்கள் பெயரில் நடைபெறும் மோசடிகளை நம்ப வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தினந்தோறும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில், மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யும் சம்பவங்கள்குறித்துப் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், காவல் ஆணையர் அருண், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை என்பது நீட் மதிப்பெண்களின் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நடைபெறும் கலந்தாய்வு வழியாக மட்டுமே நடைபெறும். இடைத்தரகர்கள் கூறுவதை நம்பி பணத்தை இழக்க வேண்டாம்" என்று போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசின் கலந்தாய்வில் கலந்துகொள்வதன் மூலமும், அல்லது கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள சேர்க்கை மையத்தைத் தொடர்புகொண்டு மட்டுமே மருத்துவப் படிப்புக்கான இடங்களை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கும் இந்த மோசடி சம்பவங்கள்குறித்து மத்திய குற்றப்பிரிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.