சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் புகுந்து, ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரைத் தாக்கிய ரவுடி, வழக்கறிஞர்கள் மற்றும் திருநங்கைகள் கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாடகை வீட்டு விவகாரத்தில் அரங்கேறிய இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு ரத்தினபுரி தெருவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரியும், ஆன்மீக சொற்பொழிவாளருமான சண்முகம், சரவணகுமார் என்பவரின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி கூறியபோதும், ஒப்பந்தம் முடிவடையாததால் சண்முகம் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு சண்முகத்தின் வீட்டிற்குள் திடீரென புகுந்த டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த ரவுடியும் வழக்கறிஞருமான ஞானம் என்ற திருஞானம் தலைமையிலான ஒரு கும்பல், சண்முகம், அவரது மனைவி ஜெயந்தி, மகன், மகள் என அனைவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. வீட்டில் இருந்த கணினி, சாய் பாபா சிலைகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கிய அந்தக் கும்பல், உடனடியாக வீட்டை காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சண்முகம் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட ஞானம் 'ஏ' கேட்டகிரி ரவுடி என்பதும், அவர் மீது ஏற்கனவே 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வீட்டு உரிமையாளர் சரவணகுமார், ரவுடி ஞானம், நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் ஐந்து திருநங்கைகள் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், ஆபாசமாகத் திட்டுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.