தமிழ்நாடு

இதுக்கு இல்லயா சார் ஒரு End..? மீண்டும் எகிறிய தங்கம் விலை!

வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இதுக்கு இல்லயா சார் ஒரு End..? மீண்டும் எகிறிய தங்கம் விலை!
Gold Rate
வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.1360-ம், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை

நேற்று காலை ஒரு சவரனுக்கு ரூ. 1,600 குறைந்து ரூ. 1,12,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 14,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 20-ம், கிலோவுக்கு ரூ. 20,000-ம் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளியில் விலை ரூ. 300-கீழ் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் இந்த மகிழ்ச்சி மாலை வரை நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்ந்தது. தங்கம் சவரனுக்கு ரூ.1040 உயர்வு. கிராமுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,14,000 -க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தங்கம், வெள்ளி விலை உயர்வு

இன்றைய தினம் மீண்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,15,360 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,420 விற்பனை ஆகிறது.

இதே போன்று வெள்ளியும் இன்றைய தினம் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,85,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.