முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 50-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், கரூர் கூட்ட நெரிசல், நடிகர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு மற்றும் திருவண்ணாமலை காவல்துறை சம்பவம் குறித்துப் பேசிய விவரங்கள் பின்வருமாறு:
தேசத் தலைவர்கள் மீதான மரியாதை
காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவு நாள், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் ஆகிய மூன்று பேரையும் நினைவில் வைத்து மரியாதை செலுத்துவதில் பாஜக என்றைக்கும் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது. மேலும், காந்தி மற்றும் காமராஜரின் சுதேசி தத்துவத்தை நினைவு கூர்ந்த அவர், பிரதமர் வழியில் அனைவரும் தேச ஒற்றுமைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கரூர் விபத்து குறித்து அடுக்கடுக்கான கேள்விகள்
சமீபத்தில் கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
கும்பமேளாவில் 64 கோடி மக்கள் வந்தார்கள். ஆனால் கரூரில் 41 பேர் பரிதாபமாக செத்துப் போயிருக்கிறார்கள். அங்கே கரண்ட் ஆஃப் பண்ணியது யார்? செருப்பை தூக்கி எறிந்தது யார்? காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? ஏன் தவெகவினர் கேட்ட இடத்தில் அனுமதி வழங்கப்படவில்லை? போலீஸ் லத்தி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் என்ன? கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே 30 ஆம்புலன்ஸ்கள் வருவதற்கு காரணம் என்ன? முதலமைச்சர் கரூர் வரும்போது ரவுண்டானா போன்ற நல்ல இடங்களில் அனுமதி வழங்கப்படுவதாகவும், ஆனால் தவெகவினருக்கு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
விஜய் மற்றும் பாஜக குறித்து
தவெக தலைவர் விஜய், பாஜகவை விமர்சிப்பது குறித்துப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், பாஜகவை தங்களின் எதிரி என்று கூறி, விமர்சித்து பேசிக் கொண்டிருக்கும் விஜய் எங்களுடைய பிடியில் எப்படி இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், கரூரில் ஆய்வு மேற்கொண்ட பாஜக குழு அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை சம்பவம் மற்றும் காவல்துறை
திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் குறித்துப் பேசிய அவர், இது இன்றைக்கு நேற்றைக்கு நடந்த சம்பவம் இல்லை. திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து வேலியே பயிரை மேய்ந்தார் போல காவல்துறை காமுகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை," என்று அவர் குற்றம் சாட்டினார்.