K U M U D A M   N E W S

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

கரூர் துயர சம்பவம்: தவெக தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

கரூர் துயரம்: விஜய் காலதாமதமும், தவெக குளறுபடிகளுமே காரணம் - திருமுருகன் காந்தி கடும் குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

என் வாழ்வில் வலி மிகுந்த தருணம்; அனைத்து உண்மைகளும் வெளியே வரும் - கரூர் சோகம் குறித்து விஜய் வேதனை!

கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்க்காகப் பால் விநியோகத்தை தடுத்த போலீஸ் - நடவடிக்கை எடுக்கக் கோரி பால் முகவர்கள் சங்கம் புகார்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் நாமக்கல் வருகையையொட்டி, பால் விநியோகம் செய்யச் சென்ற பால் முகவர் சங்க நிர்வாகியைத் தடுத்து நிறுத்தி, மிரட்டிய போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

எடப்பாடி மக்களுக்குக் கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி!

எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

“என் நெஞ்சில் குடியிருக்கும்”... சாதனை படைத்த ஜனநாயகன் திரைப்படத்தின் FIRST ROAR!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

அப்பா- அம்மாவிடம் சொல்லுங்க.. கல்வி விருது விழாவில் கொக்கி போட்ட விஜய்

சென்னை மாமல்லபுரம் பகுதியில் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கிய நிலையில், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் “இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்” என மறைமுகமாக தேர்தல் குறித்து கொக்கி போட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.