தமிழ்நாடு

எடப்பாடி மக்களுக்குக் கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி!

எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி மக்களுக்குக் கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி!
எடப்பாடி மக்களுக்குக் கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி!
திருநெல்வேலியில் பசுமைத் தமிழ்நாடு திட்டத்தை தொடங்கி வைத்த ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குக் காட்டமாக பதிலளித்தார். அதே சமயம், நடிகர் விஜய் தொடர்பான அரசியல் கேள்விகளை அவர் சாதுரியமாகத் தவிர்த்தது கவனத்தைப் பெற்றது.

திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் நேரு, சிரித்தபடியே, அவர் மக்கள் மீது ரொம்பக் கவலைப்பட்டார். அதனால்தான் இப்போது வீட்டில் இருக்கிறார். அவர் மக்கள் மீது உண்மையிலேயே கவலைப்பட்டிருந்தால், அவர் ஏன் வீட்டுக்குப் போகிறார்? " என்று பதிலடி கொடுத்தார். திமுகவை குறிவைத்து எல்லோரும் தாக்குகிறார்கள், அவர்களுக்கு இதை விட்டால் பேசுவதற்கு வேறு வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, காய்த்த மரம்தான் கல்லடிபடும் என நடிகர் விஜய் கூறியது குறித்தும், அவருக்கு அரசியல் அறிவு இல்லை என நீங்கள் கருதுகிறீர்களா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், "இல்லை, வேறு ஏதாவது பேசுங்கள்," என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டார். எனினும், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாரபட்சம் காட்டுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு விரிவான விளக்கமளித்தார். காவல்துறை அனுமதி, பொதுமக்களின் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டே வழங்கப்படுகிறது என்றும், இது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவருக்கும் பொதுவான நடைமுறை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் இருந்து செயல்படுவதாக கனிமொழி எம்.பி. விமர்சித்தது குறித்த கேள்விக்கு, அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அப்படிச் சொல்லியிருப்பார்கள் என சுருக்கமாகப் பதிலளித்தார். உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்த பேருந்து வசதி மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.