சினிமா

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, அனிருத் உள்ளிட்டோர் தேர்வு!

நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி உள்பட திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, அனிருத் உள்ளிட்டோர் தேர்வு!
Kalaimamani Awards Announcement
2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, விக்ரம் பிரபு, இசையமைப்பாளர் அனிருத் உட்படப் பல திரைக் கலைஞர்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா, வரும் அக்டோபர் மாதம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும். இந்த விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்குவார். விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

முக்கிய விருது பெறுவோர் பட்டியல்

எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை): பாடகர் கே.ஜே. யேசுதாஸ்

2021-க்கான விருதுகள்:

எஸ்.ஜே. சூர்யா (நடிகர்)

சாய் பல்லவி (நடிகை)

லிங்குசாமி (இயக்குநர்)

சூப்பர் சுப்பராயன் (சண்டைப் பயிற்சியாளர்)

2022-க்கான விருதுகள்:

விக்ரம் பிரபு (நடிகர்)

விவேகா (பாடலாசிரியர்)

ஜெயா வி.சி. குகநாதன் (இயக்குநர்)

2023-க்கான விருதுகள்:

கே. மணிகண்டன் (நடிகர்)

எம். ஜார்ஜ் மரியான் (நடிகர்)

அனிருத் (இசையமைப்பாளர்)

ஸ்வேதா மோகன் (பாடகி)

சாண்டி (எ) அ. சந்தோஷ்குமார் (நடன இயக்குநர்)

திரைப்பட அரங்க அமைப்பாளர் ஜெயகுமார், திரைப்பட செய்தித் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு மற்றும் நிகில் முருகன், திரைப்பட புகைப்படக் கலைஞர் டி. லட்சுமிகாந்தன் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.