தனது வீட்டிற்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருவதாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் மற்றும் அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர் இன்று புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரூர் சம்பவம், நடிகர் விஜய் மற்றும் பாஜக குறித்துப் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பாதுகாப்பு கோரிப் புகார்
சமீப நாட்களாக 20-க்கும் மேற்பட்ட முறை மின்னஞ்சல் (Email) மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், தனக்கும் தனது வீட்டிற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி அவர் மனு அளித்தார். விவிஐபிக்களின் பெயர்களில் மிரட்டல்கள் வந்துள்ளது. எனக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் வீட்டிற்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார். பாஜக அலுவலகத்தில் கொட்டாவி விடுபவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அண்ணாமலைக்கு எதற்காகப் பாதுகாப்பு? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
விஜய்யை சாடிய எஸ்.வி.சேகர்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குக் காரணம் விஜய்யே என்றும், அவரது ஒழுக்கமற்ற கூட்டத்தால் ஏற்பட்ட விபத்து என்றும் எஸ்.வி.சேகர் விமர்சித்தார். தனக்கு வந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த விஜய் தவறிவிட்டார். அது அவரது தவறு. தலைவருக்கே ஒழுக்கம் இல்லாத போது தொண்டர்களுக்கு எப்படி இருக்கும்? ஒழுக்கமற்ற கூட்டம் இது. போலீசுக்கு அளித்த தகவலில் தவறு செய்துவிட்டார். காலதாமதமாக விஜய் வந்தது தவறு.
விஜய் நல்ல தலைவனாக ஆசைப்பட்டு இருந்தால், கரூர் சென்று இறந்தவர்களின் வீட்டிற்குச் சென்றிருக்க வேண்டும். விஜய் எம்ஜிஆராக முடியாது. அவரிடம் அரசியல் பக்குவம் இல்லை. 27 ஆயிரம் பேர் இருக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத விஜய், 10 கோடி பேர் இருக்கும் தமிழகத்தைக் கட்டுப்படுத்த முடியுமா?"
விஜய் அரசியல் குறித்த கருத்து: விஜய் அரசியலுக்கு வருவதன் பின்னணியில் மத்திய பாஜக இருப்பதாகக் குற்றம் சாட்டிய எஸ்.வி.சேகர், விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசினார். சினிமாவில் ஒப்பந்தம் போட்டு நடித்துக் கொண்டிருந்த விஜய், அமித்ஷாவிடம் அரசியலில் நடிக்க ஒப்பந்தம் போட்டு கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். விஜய் அவரது தந்தை சந்திரசேகரின் பேச்சைக் கேட்காமல், புஸ்ஸி ஆனந்த் பேச்சைக் கேட்டதாலேயே இந்தப் பிரச்சினையில் சிக்கி உள்ளார்.
விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்குவார்
"2026, 2031-ல் கூட விஜய்க்கு வாய்ப்பு இல்லை. 2036 ஆம் ஆண்டு கூட முயற்சி பண்ணலாம். நான் பாஜகவில் இருந்து வெளியே வந்துவிட்டேன். நான் ஏன் பாஜக ஸ்லீப்பர் செல்லாக இருக்க வேண்டும்? பாஜக என்பது மிகப்பெரிய பாறாங்கல். அதனை கட்டிக்கொண்டு குதிப்பவர்கள் தண்ணீரில் மூழ்கி விடுவார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவையும் சேர்த்துத்தான் பாறாங்கல் என்று சொல்கிறேன். பாஜக தமிழ்நாட்டில் வராது. யாரோ ஒருவருக்கு நான் திமுகவில் சேருவது பிடிக்கவில்லை என்றால், கண்டிப்பாக திமுகவில் சேருவேன். கலைஞர் குடும்பத்துடன் எனக்கு 40 ஆண்டுகால நட்பு உண்டு. முதலமைச்சர் எனது நாடகத்தைக் காண நட்பின் அடிப்படையில் வந்தார்.