K U M U D A M   N E W S

திருவண்ணாமலை சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது: சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு குறித்து ஜி.கே.வாசன் பேட்டி!

ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.