K U M U D A M   N E W S

வரும் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும்–நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சி மாற்றப்பட்டு, என்.டி.ஏ. தலைமையில் புதிய ஆட்சி அமையவேண்டும். அனைவரும் ஆதரவு தரவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என நாயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அமைச்சர் பொன்முடி பெண்களைப் பற்றி மிகத் தரக்குறைவாக பேசி சம்பவம் தொடர்பாக நாங்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பெண்களிடம் எடுத்துக் கூற உள்ளோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்.13) பதவியேற்ற நிலையில், முன்னாள் தலைவரின் டெல்லி பயணம் பாஜக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலையின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும்- அமித்ஷா பதிவு

கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை பெயர் பலகையை அழித்தது யார்? குழு அமைத்து விசாரணை நடத்த பாஜக முடிவு

அண்ணாமலை பெயர் பலகை கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்ட சம்பவத்தில் குழு அமைத்து விசாரணை நடத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக பேனரில் இடம்பெற்ற நயினார் புகைப்படம்.. தலைவர் குறித்து சூசகமாக அறிவிப்பு?

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட உள்ளதை பேனரின் மூலம் சூசகமாக பாஜக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தலைவர் யார்? பரபரப்பான அரசிலயல் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ( ஏப்.10 ) தமிழகம் வருகிறார். பாஜக மாநில தலைவர் மற்றும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.