அரசியல்

திமுக ஆட்சியில் எல்லாவற்றையும் திருடுவார்கள்…நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திமுக ஆட்சியில் கிட்னியும் திருடுவார்கள், எல்லாவற்றையும் திருடுவார்கள் என நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளியை ஏமாற்றி கிட்னி திருடிய சம்பவம் குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்

திமுக ஆட்சியில் எல்லாவற்றையும் திருடுவார்கள்…நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் போலீசாருடன் பேச்சுவார்த்தை
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி 10வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்திற்கு முன்பு ஒன்று கூடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை சமுதாய நலக்கூடத்தில் காவல்துறையினர் கைது செய்து வைத்துள்ளனர்.

அராஜக செயல்கள்

இவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்திக்க வந்தார். அவரையும் அவருடன் வந்த பாஜகவினரையும் பகுதி நேர ஆசிரியர்களை கைது செய்து வைப்பதால் அவர்களை அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், “ திமுக அரசு கல்வித்துறையின் தூண்களாக விளங்கும் ஆசிரியர்களை கைது செய்திருப்பது அராஜகமான செயல்.தமிழ்நாட்டில் அராஜக செயல்கள் நடைபெற்றுக்கொண்டுள்ளது உரிமைக்காக போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை அவர்கள் உரிமையை கேட்கிறார்கள். 2021 தேர்தலின்போது 181வது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சொன்னதை செய்யவில்லை.பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை பார்க்க எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குவாரிகள் ஏராளமாக உள்ளது. இன்று காலையில் கூட 7ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைக்கு லாரி ஏறி கால் நசுங்கிவிட்டது.கும்மிடிப்பூண்டி அருகில் பத்து வயது பெண் குழந்தையை இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் இதுவரை கைது செய்யவில்லை.

சட்டவிரோத செயல்கள்

உரிமைக்காக போராடும் பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்திருக்கிறார்கள். மயிலாடுதுறையில் சீல் வைத்ததற்காக ஒரு டிஎஸ்பி இடம் ஜீப்பை பிடிங்கிக்கொண்டிருக்கிறார்கள். பாதுகாக்கும் அரசாங்கமே எல்லா பழி பாவ செயலிலும் ஈடுபட்டு இருக்கிறது. எல்லா இடத்திலும் சட்டவிரோதமான போதைப்பொருட்கள் உள்ளது.சட்டவிரோத செயல்பாடுகள் ஈடுபடுபர்களை எல்லாம் விட்டுவிட்டு பகுதி நேர ஆசிரியர்களை கைது செய்து இருக்கிறார்கள். அவர்களை பார்க்கவும் அனுமதிக்கவில்லை.

ஆசிரியர்களுக்கு பணி கொடுக்க திறன் இல்லாமல், வழி தெரியாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். ஆதிதிராவிட பள்ளிகளில் யாரும் சேரப் போவதில்லை. ஆதிதிராவிட பள்ளிகளில் 5000 ஆசிரியர்கள் மேல் பணியிடம் காலியாக உள்ளது. நிர்வாகம் செய்யத்தெரியாமல் தமிழ்நாடு முதல்வர் ஓரணியில் திரள்வோம் என்று ஊர்வலமாக சென்று கொண்டுள்ளார்.

மக்களை ஏமாற்றும் திமுக அரசு

நிச்சயமாக இவை அனைத்தும் தேர்தலில் எதிரொலிக்கும். ஆசிரியர்கள் எந்த அரசாங்கத்தை எதிர்த்து போராடுகிறார்களோ அதற்கு மாற்று அரசாங்கம் நிச்சயம் ஆட்சிக்கு வரும்.ஏற்கனவே அதிமுக ஆட்சியிலும், சரி திமுக ஆட்சியிலும் சரி இவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற கேள்விக்கு, நாங்கள் உறுதியளிக்கிறோம். 2026ல் நிச்சயம் தேசிய ஜனநாயக ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றுக்கெல்லாம் முடிவு கிடைக்கும்.

ஏற்கனவே திருப்பூரில் விசைத்தறி தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி சென்று உறுதி அளித்தார்கள். அதை நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றும் அரசாங்கத்தாகத்தான் திமுக உள்ளது. திமுக ஆட்சியில் கிட்னியும் திருடுவார்கள் எல்லாவற்றையும் திருடுவார்கள் என காட்டமாக பதில் அளித்தார்.