தமிழக அரசியலில் ஒரு சாமானிய மனிதரும் மிக உயர்ந்த இடத்திற்கு வர முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் ஓ. பன்னீர்செல்வம். 1951 ஜனவரி 14 அன்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த இவர், ஆரம்பகாலத்தில் தேனி பகுதியில் டீக்கடை நடத்தி வந்தவர். 1973 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்ததன் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
ஆரம்பகால அரசியல் பதவிகள்
கட்சியில் அடிமட்டத் தொண்டராக இருந்து படிப்படியாக உயர்ந்த இவர், 1996 ஆம் ஆண்டு பெரியகுளம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2001 முதல் 2021 வரை பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனூர் தொகுதிகளில் போட்டியிட்டு 5 முறை சட்டமன்ற உறுப்பினராகப் (MLA) பணியாற்றியுள்ளார்.
மூன்று முறை முதலமைச்சர்: இக்கட்டான சூழலில் ஆட்சிப் பொறுப்பு
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஓபிஎஸ், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பை வகித்துள்ளார்:
முதல் முறை (2001-2002): டான்சி நில பேர வழக்கில் ஜெயலலிதா பதவி விலகியபோது முதல் முறையாக முதலமைச்சரானார்.
இரண்டாம் முறை (2014-2015): சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
மூன்றாம் முறை (2016-2017): ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
தர்மயுத்தம் முதல் கட்சிக் குழப்பங்கள் வரை
2017 பிப்ரவரி 7 அன்று சசிகலா ஆதரவாளர்களுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் ஜெயலலிதா நினைவிடத்தில் 'தர்மயுத்தம்' நடத்தினார். பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து 2017 முதல் 2021 வரை துணை முதலமைச்சராகப் பணியாற்றினார். இருப்பினும், 2021-22 காலக்கட்டத்தில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மார்ச் 2024-ல் 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைத்' தொடங்கினார்.
புதிய அத்தியாயம்: திமுகவில் இணைந்த ஓபிஎஸ்
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியைச் சந்தித்த ஓபிஎஸ், தற்போது தனது அரசியல் பாதையைத் திமுகவை நோக்கித் திருப்பியுள்ளார். கடந்த வாரம் சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்தபோது, "திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், "இனி தளபதி எடுக்கின்ற அரசியல் முடிவுக்கு முழுமையாகக் கட்டுப்படுவேன்" என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

LIVE 24 X 7