தமிழக வெற்றிக் கழகத்தின் எழும்பூர் தொகுதி வேட்பாளர் ராஜ்மோகன் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது, அனுமதியின்றி கோவிலுக்குள் வீடியோ எடுத்த விவகாரத்தில் சென்னை வேப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், எழும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் ராஜ்மோகன், கட்சியின் ஊடகப்பிரிவு நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மற்றும் எழும்பூர் பகுதிச் செயலாளர் ஓட்டேரி நந்தா ஆகியோர் சூளை பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் கோவில் விதிமுறைகளை மீறி கருவறை வரை சென்று வீடியோ பதிவு செய்து, அதனை யூடியூப் தளத்திலும் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது.
கோவில் நிர்வாகம் புகார்
கோவிலின் புனிதத் தன்மையைப் பாதிக்கும் வகையில் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்தது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கங்காதேவி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தவெக நிர்வாகிகள் மூவர் மீதும் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் பரபரப்பு
ஏற்கனவே மயிலாப்பூர் தவெக வேட்பாளர் மீது அவரது மனைவி புகார் அளித்திருந்த நிலையில், தற்போது எழும்பூர் வேட்பாளர் மீதும் வழக்குப் பாய்ந்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LIVE 24 X 7