தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரும் 17-ஆம் தேதி முதல் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் திமுக-விற்குத் தனது ஆதரவை வழங்கியுள்ளது. தேர்தல் பணிகளில் இதுவரை அமைதி காத்து வந்த கமல்ஹாசன், தற்போது இறுதி கட்டப் பிரசாரத்திற்காகத் தயாராகியுள்ளார். வரும் ஏப்ரல் 17 முதல் 20-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் 26 தொகுதிகளில் அவர் சூறாவளிப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
விஜய்க்கு எதிராகக் களமிறங்கும் கமல்
கமல்ஹாசனின் இந்தப் பிரசாரப் பயணத்தில் மிகவும் முக்கியமாகப் பார்க்கப்படுவது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதிகள் தான். தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்துக் கமல் பிரசாரம் செய்ய உள்ளார். குறிப்பாக ஏப்ரல் 17-இல் பெரம்பூரிலும், பிரசாரத்தின் கடைசி நாளான ஏப்ரல் 20-இல் திருச்சி கிழக்கிலும் அவர் உரையாற்றுகிறார்.
முக்கியப் பிரசார இடங்கள்
வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, சென்னையில் துறைமுகம், கொளத்தூர், மயிலாப்பூர் மற்றும் சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளிலும், அதனைத் தொடர்ந்து கோவை தெற்கு, அவிநாசி மற்றும் திருவரங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் வாக்குச் சேகரிக்கிறார்.

LIVE 24 X 7