தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பா.ம.க.வில் இருவேறு நிலைப்பாடுகள் நிலவி வரும் சூழலில், அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியா?
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா?" என்ற கேள்விக்கு "இருக்கும்" என்று பதிலளித்தார். ஏற்கனவே அக்கட்சியின் ஒரு தரப்பினர் அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், ராமதாஸின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
தேர்தல் வாகனம் தயார்
கூட்டணி முடிவை இன்றே அறிவிக்க முடியாததற்குக் களம் இன்னும் முழுமையாக அமையவில்லை என்று குறிப்பிட்ட அவர், "நமக்கான தேர்தல் வாகனம் தயாராகிவிட்டது. உரிய நேரம் வரும்போது முறைப்படி அறிவிப்பேன்" என்றார். மேலும், வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ கூட்டணிக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

LIVE 24 X 7