நெல்லை சந்திப்பு உடையார் பட்டியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை மற்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “திமுக அரசை மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்புவது எங்களது நோக்கம் உள்ளது.
திமுகவுக்கு தேர்தல் பயம்
தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என அறிவித்துவிட்டு அதன் பிறகு தகுதி உள்ள பெண்களுக்கு வழங்கப்படும். தகுதி உள்ள பெண்கள் யார் என்று இன்றுவரை தெரியவில்லை. தற்போது தேர்தல் வருவதை ஒட்டி மகளிர் உரிமைத்தொகை வழங்காத பெண்களுக்கு வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை துவங்கி உள்ளார் .
ஏற்கனவே தேர்தல் நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. மீண்டும் இது போன்று பொதுமக்களை ஏமாற்றும் செயலில் ஸ்டாலின் இறங்கியுள்ளார். தற்போது தேர்தல் வருவது ஒட்டி திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. காரணமாக தற்போது பெண்களுக்கு மீண்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிப்பது தேர்தல் பயம்.
மீனவர்கள் பிரச்னை
பீகாரில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதுபோல, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது. அதுதான் தற்போது டி.என்.பி எஸ்.சி தேர்வு வரை விடியல் பயணம் எப்போது துவங்கியது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தினம்தோறும் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உயிரோடு கரை திரும்பவில்லை.
பள்ளிகளில் தேவையில்லாத நடவடிக்கை
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது மூலமாக பெண்களின் பொருளாதாரம் உயர்ந்து உள்ளதாக தமிழக முதலமைச்சர் பேசி வருகிறார். தமிழகத்தின் பால் என்ன விலை என்பது தமிழக முதலமைச்சருக்கு தெரியுமா? சர்க்கரை என்ன விலை என்று தெரியுமா? காய்கறி மற்றும் பல சரக்கு விலை தமிழக முதலமைச்சருக்கு தெரியுமா? ஆனால் ஆயிரம் ரூபாய் மூலமாக பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பது முற்றிலும் தவறு.
நேற்று காமராஜர் பிறந்தநாளை ஒட்டி திமுகவினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கருணாநிதி காமராஜருக்கு என்ன செய்தார் என்பது தொடர்பாக பெருமையாக தெரிவித்து வருகிறார்கள்.காமராஜருக்கு திமுக என்ன செய்தது என்று அனைவருக்கும் தெரியும்.அதனை வெளியே தெரிவித்தால் திமுகவுக்கு அசிங்கமாகிவிடும். தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையே இல்லை. அரசு பள்ளிகளில் ப வடிவில் இருக்கை அமைப்பது தேவையில்லாதது” என தெரிவித்தார்.