இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) புதிய மைல்கல்லாக, விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 18 நாட்கள் வெற்றிகரமாகத் தங்கி பூமிக்கு திரும்பியதை ஒன்றிய அமைச்சரவை பாராட்டி வரவேற்றுள்ளது.
இந்திய விமானப்படை விமானி சுபான்ஷு சுக்லா (ஜூன் 25) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து SpaceX நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம் -4' மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25ம் தேதி நண்பகல் 12 மணிக்குச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டனர்.
அமெரிக்காவை சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும்சுபான்ஷூ சுக்லா ஆகிய 4 பேரும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாள்கள் தங்கியிருந்து நுண்ஈர்ப்பு விசை மற்றும் சூழலுக்கு ஏற்ப எலும்புகள் செயல்படும் விதம்குறித்து ஆய்வு செய்தார். இஸ்ரோ, நாசா, ஆக்சியம் ஸ்பேசின் கூட்டு முயற்சியாக மனிதர்களை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அங்குத் தங்கி, விண்வெளியில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள், உடல் உறுப்புகளின் மீளுருவாக்கம், விண்வெளியில் பயிர்களின் வளர்ச்சி, நுண்ணுயிரிகளின் செயல்பாடு போன்ற பல்வேறு முக்கியமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
ஆய்வினை வெற்றிகரமாக முடிவுபெற்ற நிலையில், தற்போது விண்வெளிக்கு சென்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூலம் அவர்கள் 13ம் தேதி புறப்பட்டு, மறுநாள் ஜூலை 14ம் தேதி பூமிக்கு வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 22 மணி நேரம் பயணித்து இன்று பூமிக்கு வந்தடைந்தனர்.
இந்நிலையில், விண்வெளிக்கு சென்ற குழுவைப் பாராட்டும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சுபான்ஷூ சுக்லாவின் சாதனையைப் போற்றும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு பொன்னான அத்தியாயம் என்றும், எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும் ஒரு நிகழ்வு என்றும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "குழு கேப்டன் சுபான்ஷூ சுக்லாவின் இந்தப் பயணம், இந்திய இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும். அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பதோடு, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் தூண்டும்" என்று குறிப்பிட்டார்.
மேலும், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி மற்றும் ஆதித்யா-எல்1 சூரிய ஆய்வுத் திட்டம் போன்ற இந்தியாவின் சமீபத்திய சாதனைகளையும் அமைச்சரவை நினைவு கூர்ந்தது. இந்தச் சாதனைகள், அறிவியல் துறையில் இந்தியாவின் தன்னிறைவை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திப் பிடித்துள்ளன.
இந்தியாவின் விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள சீர்திருத்தங்கள், சுமார் 300 புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக வழிவகுத்துள்ளது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், புதுமையான தொழில்முனைவோருக்கு ஒரு சிறந்த சூழலை உருவாக்கியுள்ளது என்று அமைச்சரவை பாராட்டியது.
2047-க்குள் 'விக்ஸித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைய இந்த விண்வெளி பயணம் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். சுபான்ஷூ சுக்லாவின் இந்தச் சாதனை, இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்கால இந்திய விண்வெளி வீரர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.