தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இபிஎஸ் - நயினார் சந்திப்பு
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “எடப்பாடி பழனிசாமி உடனான எனது சந்திப்பு மரியாதை நிமித்தமானது. பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தொடர்பாக பேசினேன். அரசியல் நிலவரங்கள் குறித்து எதுவும் விவாதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கூட்டணி வியூகங்கள்
மேலும், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதுகுறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், இந்தச் சந்திப்பு மேலும் அரசியல் முக்கியத்துவம் பெற்றது. இந்த சந்திப்பின் பின்னணியில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் மற்றும் பல கட்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது.
நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்
இந்த நிலையில், திண்டுக்கல்லில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை மாநாடானது நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து மாலை 4 மணி அளவில் டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார். பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை மாநாட்டின் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து தெரியப்படுத்துவதற்காகவும், தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிலவரம் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டவரை சந்திக்க பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.