ஆந்திர துணை முதல்வரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் நடித்துள்ள 'தே கால் ஹிம் ஓஜி' (They Call Him OG) திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இயக்குநர் மற்றும் நடிகர் பட்டாளம்
'சாஹோ' மற்றும் 'ரன் ராஜா ரன்' போன்ற படங்களை இயக்கிய சுஜித் இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பவன் கல்யாணுடன், பிரியங்கா மோகன் 'கண்மணி' என்ற கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் பின்னணி
2023-ஆம் ஆண்டிலிருந்தே இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. பவன் கல்யாண் துணை முதல்வரானதால், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. டி.வி.வி தனய்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான 'தே கால் ஹிம் ஓஜி' பாடலை நடிகர் சிம்பு பாடியது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பான டிரெய்லர்
வெளியாகியுள்ள டிரெய்லரில் உள்ள அதிரடி சண்டைக் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தப் படம் பவன் கல்யாணின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

Let’s go 🔥🔥🔥#OGTrailer - https://t.co/E0h012DXTB#OG #TheyCallHimOG pic.twitter.com/9dAgNDIMc5
— DVV Entertainment (@DVVMovies) September 22, 2025