சினிமா

Thalaivar 173: 35 வருடங்களுக்கு பின் ரஜினிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalaivar 173: 35 வருடங்களுக்கு பின் ரஜினிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!
Rajini 173
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ஜெயிலர் 2' படத்தைத் தொடர்ந்து, 'டான்' பட புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கான முதற்கட்டப் பணிகள் மற்றும் நடிகர், நடிகையர் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'தளபதி' காம்போவின் மறுபிரவேசம்

ரஜினிகாந்த் மற்றும் ஷோபனா கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது 1991-ல் வெளியான 'தளபதி' திரைப்படம் தான். சூர்யா - சுப்புலட்சுமி கதாபாத்திரங்களில் இவர்களது நடிப்பு இன்றும் கொண்டாடப்படுகிறது. முன்னதாக 'சிவா' படத்திலும், சமீபத்தில் 'கோச்சடையான்' அனிமேஷன் படத்திலும் இவர்கள் இணைந்து பணியாற்றினர். இருப்பினும், ஒரு நேரடித் திரைப்படத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திர ஜோடி மீண்டும் இணையவுள்ளது திரைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பு அப்டேட்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்திலான இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் தமிழ்த் திரையுலகின் முகமாகத் திகழும் ரஜினிகாந்த், இளம் இயக்குநர்களுடன் கூட்டணி அமைப்பதோடு, பழைய ஹிட் ஜோடிகளையும் திரையில் கொண்டு வருவது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Image