சூர்யாவின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், தற்போது அதன் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'விஸ்வநாத் & சன்ஸ்' (Vishwanath & Sons) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
க்ளாஸான போஸ்டர் மற்றும் சூர்யாவின் லுக்
வெளியாகியுள்ள போஸ்டரில், சூர்யா மிகவும் ஸ்டைலான மற்றும் மென்மையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். ஒரு பெரிய கார்ப்பரேட் அலுவலகத்தின் பின்னணியில், தனது மார்போடு ஒரு குழந்தையைச் சுமக்கும் 'பேபி கேரியர்' (Baby Carrier) அணிந்து கொண்டு, ஒரு கையில் பால் பாட்டிலுடன் அவர் சிரித்தபடி நிற்கிறார். கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு 'க்ளாஸ்' லுக் கொடுக்கும் இந்த போஸ்டர், படம் ஒரு அழகான குடும்பக் கதையாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படம் தந்தை-மகன் உறவைப் பேசும் கதையாக இருக்கலாம் என்ற ஆவலைத் தூண்டியுள்ளது.
வெங்கி அட்லுரி - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி
இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்குகிறார். இவர் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' மற்றும் சமீபத்திய வெற்றிப் படமான 'லக்கி பாஸ்கர்' ஆகியவற்றின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே முத்திரை பதித்தவர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 'சூரரைப் போற்று' படத்திற்குப் பிறகு சூர்யா - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
திரைப்படத்தின் வெளியீடு
சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் ஜூலை மாதம் படம் திரைக்கு வரும் என்பதைப் படக்குழு உறுதி செய்துள்ளது. சூர்யாவின் 45-வது படமான 'கருப்பு' வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 46-வது படத்தின் அறிவிப்பு திடீரென வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Power in his presence. 🔥
— Sithara Entertainments (@SitharaEnts) March 2, 2026
Warmth in his embrace.🤍
Bringing back the vintage magic of @Suriya_offl in a heart-touching family spectacle. 🤩#VishwanathAndSons ~ The biggest family drama of the year arrives this July. 🫶🏻#VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena… pic.twitter.com/frvwNwuU8f
LIVE 24 X 7