சினிமா

குழந்தையை பார்த்துக்கொள்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் உறுதி- ஜாய் கிரிசில்டா

மாதம்பட்டி ரங்கராஜ் தனது குழந்தையை வாழ்நாள் முழுவதும் பார்த்துகொள்ள ஒப்புக்கொண்டதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.

குழந்தையை பார்த்துக்கொள்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் உறுதி- ஜாய் கிரிசில்டா
Madhampatty Rangaraj and Joy Crizlda
சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான சர்ச்சையில், டி.என்.ஏ (DNA) பரிசோதனை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் ஒரு முக்கிய முடிவை எட்டியுள்ளதாகத் தெரிகிறது.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, குழந்தையின் தந்தை யார் என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அந்தப் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

வெளியான டி.என்.ஏ பரிசோதனை முடிவில், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது உறுதியானது. இந்த முடிவுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவின்படி இரு தரப்பினரும் மத்தியஸ்தர் குழுவிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "மத்தியஸ்தர் குழுவினரிடம் பேசிய ரங்கராஜ், குழந்தையைத் தனது வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்றுப் பார்த்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்" என ஜாய் குறிப்பிட்டுள்ளார்.