சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வரும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் வீடுகளில் 5 'ஆர்டிஎக்ஸ்' (RDX) ரக வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப்போவதாகவும் தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. இன்று காலை இந்த மின்னஞ்சலைப் பார்த்த அதிகாரிகள், உடனடியாக தேனாம்பேட்டை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
மோப்ப நாய் மற்றும் நிபுணர்கள் சோதனை
தகவல் கிடைத்ததும், தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் இரண்டு நடிகர்களின் இல்லங்களுக்கும் விரைந்தனர். பாதுகாப்பு நடைமுறைகளின்படி சோதனை நடத்த முற்பட்டபோது, சம்பந்தப்பட்ட தரப்பில் இருந்து சோதனை வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், போலீசார் அந்தப் பகுதி முழுவதும் தீவிரமாக ஆய்வு செய்ததில், வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை.
மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை
முதற்கட்ட விசாரணையில், இந்த மிரட்டல் வெறும் வதந்தி (Hoax) என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? எந்த நோக்கத்திற்காக இத்தகைய பதற்றத்தை உருவாக்கினார்? என்பது குறித்து சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

LIVE 24 X 7