சினிமா

அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'பில்லா' படம் ரீ-ரிலீஸ்!

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதி 'பில்லா' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'பில்லா' படம் ரீ-ரிலீஸ்!
Billa Re Release
நடிகர் அஜித்குமாரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஸ்டைலிஷ் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'பில்லா', அவரது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'பில்லா'. ரஜினிகாந்தின் பழைய 'பில்லா' படத்தின் ரீமேக்காக இருந்தாலும், நவீன காலத்திற்கு ஏற்ப அஜித்தை மிகவும் ஸ்டைலிஷாகக் காட்டிய இப்படம், அப்போதே வசூலில் சாதனை படைத்தது.

தற்போது அஜித்தின் பிறந்தநாளான மே 1-ஆம் தேதியை முன்னிட்டு, நவீன 4K தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு இப்படத்தை மீண்டும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

யுவன் இசையில் மீண்டும் அதிரப்போகும் திரையரங்குகள்

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இப்படத்தின் மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நமீதா நடித்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளதால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே 2021-ஆம் ஆண்டு இப்படம் ஒருமுறை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தாலும், தற்போது 4K தரத்தில் வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.