முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் போன்ற முன்னணிப் பிரபலங்கள் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது நடிகை நயன்தாராவின் நீண்ட நாள் விருப்பமாக இருந்துள்ளது. தற்போது அந்த விருப்பம் நிறைவேறும் வகையில், சுமார் ரூ.31 கோடி மதிப்பில் ஒரு நவீன டூப்ளக்ஸ் (Duplex) அபார்ட்மெண்ட் வீட்டை இந்தத் தம்பதி வாங்கியுள்ளனர்.
சொகுசு வசதிகளுடன் கூடிய புதிய இல்லம்
இந்தக் குடியிருப்பு சுமார் 14,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட 'சூப்பர் பில்ட்-அப்' ஏரியாவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதற்கான பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சொத்தில் 90 சதவீத உரிமையை நயன்தாராவும், 10 சதவீத உரிமையை விக்னேஷ் சிவனும் கொண்டுள்ளனர். மேலும், சுமார் 8 கார்களைத் தாராளமாக நிறுத்தும் வகையிலான பிரம்மாண்ட பார்க்கிங் வசதி இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவின் ரியல் எஸ்டேட் முதலீடுகள்
ஏற்கனவே சென்னையில் ஒரு அபார்ட்மெண்ட் மற்றும் தனி வீடு வைத்துள்ள நயன்தாராவுக்கு, கேரளா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் சொந்த வீடுகள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது போயஸ் கார்டனில் வாங்கியுள்ள இந்த வீடு, அவரது சொத்து மதிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தேனாம்பேட்டை மற்றும் கோபாலபுரம் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த விஐபி பகுதியில் குடியேறுவதன் மூலம், நயன்தாராவின் விருப்பம் நிறைவேற்றியுள்ளது.

LIVE 24 X 7