சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர், நேற்று படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அவர் தனது படுக்கையறையில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியாக யாரோ ஒருவர் தன்னைத் தவறான நோக்கத்தில் உற்றுப் பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர் சிக்கியது எப்படி?
உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட அந்த நடிகை, வெளியே வந்து பார்த்தபோது பக்கத்து வீட்டில் வசித்து வரும் குருணா சிங் (41) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ஆவார். தன்னை நடிகை கவனித்துவிட்டதை அறிந்தவுடன் அவர் அங்கிருந்து மறைந்துள்ளார்.
போலீஸ் விசாரணை
இது குறித்து அந்த நடிகை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் குருணா சிங்கை பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அந்த நடிகை வீட்டிற்கு வரும்போதெல்லாம் குருணா சிங் அவரைத் தவறான கண்ணோட்டத்துடன் பின்தொடர்ந்து வந்ததும், இதற்காகப் பலமுறை அந்த நடிகை அவரை எச்சரித்திருந்தும் அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

LIVE 24 X 7