பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது தந்தை மற்றும் மகன் என இரு துருவங்களாகப் பிரிந்து நிற்பது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது. 'பாமக யாருக்குச் சொந்தம்?' மற்றும் 'மாம்பழ சின்னம் யாருக்கு?' என்ற சட்டப் போராட்டம் ஒருபுறம் நடக்க, மறுபுறம் நிர்வாகிகள் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.
சின்னம் மற்றும் தலைமைப் போட்டி
பாமக தலைவர் பதவி தொடர்பாகத் தேர்தல் ஆணையம் அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தில், அன்புமணி ராமதாஸே தலைவர் எனத் தெரிவித்துள்ளது. இதனால் மாம்பழ சின்னம் அவருக்கே கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தரப்பு, சின்னத்தை மீட்டெடுக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அதிகாரப் போட்டியால் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் யாருடைய பக்கம் நிற்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
மனவேதனையில் ராமதாஸ்
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி தரப்பை கடுமையாக விமர்சித்தார். "ஒரு கூட்டம் பொய் சொல்வதையே அரசியலாகக் கொண்டு செயல்படுகிறது. என்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட அவர்கள் எதை எதையோ பேசுகின்றனர். அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களை நாங்கள் கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்," என்று கூறினார்.
மேலும், கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மணி குறித்துப் பேசிய அவர், "ஓய்வின்றி உழைத்தவர் ஜி.கே மணி. அரசியலில் இத்தனை அனுபவம் கொண்ட அவரை அந்தத் தரப்பினர் வசைபாடுகின்றனர்" என்று அவர் வேதனை தெரிவித்தார்.

LIVE 24 X 7